வெற்றிலையை பயன்படுத்தும் போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி விட்டு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வெற்றிலைகளை வைத்து கசக்கி 5 அல்லது 6 சொட்டுக்கள் சாறு பிழிந்து கொடுக்கலாம்.
வெட்டுக்கள், சிராய்ப்புகள் போன்ற இடங்களில் வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மேல் தடவி வந்தால் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.
சிலருக்கு சிறுநீர் போவதில் பிரச்சனை ஏற்படும். இதை குணமாக்க வெற்றிலை சாறை அவ்வப்போது பருகி வந்தால் நச்சுக்கள் நீங்கி சிறுநீர் பெருகி சரியான கால இடைவெளியில் சிறுநீர் போக உதவும்.