கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகியோனின்' என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு குறையும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து நல்லெண்ணெய் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவர்றில் பூசி வர குணம் தெரியும்.