உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ள சுரைக்காய் !!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (12:30 IST)
சுரைக்காயில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து,  வைட்டமின் பி போன்றவை உள்ளன.


சுரைக்காய் அதிகப்படியான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படும் ஒரு உணவுப் பொருளாகும். சுரைக்காயின் பாகங்களான இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் குணம் கொண்டவையாகும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும். சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.உடலுக்கு பளபளப்புத் தன்மையை கொடுக்கிறது. மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக சுரைக்காய் பயன்படுகிறது. சுரைக்கையில் உள்ள நீர்ச்சத்து கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து கண்களை பாதுகாக்கிறது.

கோடை காலத்தில் சாப்பிட்டால்,  சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.நார்ச்சத்து நிறைந்து, மலச்சிக்கல் சரியாகும். தயமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன. பற்சொத்தை, பற்கள் பாதிப்பைத் தடுக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்