கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கல்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் ஆகியன இதில் அதிகளவில் காணப்படுகின்றன.
கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.
இரத்த சோகையை விரட்டும் முருங்கை : முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிக சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. இரும்புச் சத்தும் விட்டமின் சியும் சேர்ந்த கலவை, இரத்தத்தை உற்பத்தி செய்யும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.