இரத்தத்தை விருத்தி செய்யும் முருங்கைக் கீரை...!

Webdunia
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம்,  மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை  குணமாகும்.
 
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். முருங்கையில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துக்கள் உள்ளன.
உடல் சூட்டை தணிக்கவல்ல முருங்கை, மலட்ட்டுத் தன்மையை போக்கி, ரத்த விருத்தியை உண்டாக்குகிறது. ரத்தசோகைக்கு அருமருந்தாகும் இது, சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
 
கர்ப்பிணி பெண்களுக்கு பால்சுரப்பில் முக்கிய பங்காற்றுகிறது. தோல் நோய், முடி உதிர்வை தடுக்கிறது. உடல் மலி, கைகால் வலியை  போக்குகிறது.
 
இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.
 
பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். 
 
மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,  விந்து விருத்திக்கும் சிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்