பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாகும் கருஞ்சீரகம் !!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (12:35 IST)
கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் சார்ந்த பல விதமான நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.

கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்களின் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும் வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. மேலும் முகப்பருக்கள் நீங்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. 
 
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தையும், முடியையும் பெற கருஞ்சீரகத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
 
உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படும் நபர்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
 
நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் மிகவும் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகத்தை காலையில் வெறும் வயிற்றில் கருப்பு தேநீருடன் கலந்து அருந்துவது நல்லது.
 
கருஞ்சீரகத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.
 
வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெய்யை தேனுடன் கலந்து அருந்துவது ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்