வாழை இலையில் உணவை போட்டு சாப்பிடுவதால், வாழை இலையில் இருக்கின்ற கிருமிநாசினி வஸ்துக்கள் உணவில் இருக்கின்ற கிருமிகளை அழித்து, நோய்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.
வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும்.
சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெருபவர்கள் தீக்காயம் பட்ட பகுதியில் வாழை இலையை வைத்து, தினமும் கட்டி வந்தால் வெகு சீக்கிரத்தில் வந்து தீ காயங்கள் ஆறும்.
வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.