எளிதாக கிடைக்கக்கூடிய இந்த கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

சனி, 30 ஏப்ரல் 2022 (10:04 IST)
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. 100 கிராம் முருங்கை கீரை தினமும் உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக இருக்கும், கண் பார்வை குறைபாடும் ஏற்படாது.


முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இரத்த சோகை போன்ற நோய் எற்படாமல் தடுக்க உதவுகின்றது.

முருங்கை இலைகளில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து, தாமிரம் ஆகியவை இருக்கின்றன. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடம்பில் இரத்த சோகை குறையும். மலச்சிக்கலை தடுக்க உதவும்.

முருங்கைகீரையில் அதிக அளவில் நார்சத்து இருக்கிறது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை பருகி வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் மற்றும் குடல் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை உருவாக்காமல் தடுக்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க கூடியது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கை கீரையில் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கால், கை, உடம்பு வலிகள் நீங்கும்.

வாரந்தோறும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் முருங்கைக்கீரையில் உள்ள வைட்டமின் சி சத்து, சரும பராமரிப்புக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்