இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் தோலின் வறட்சியை போக்குமா...?

Webdunia
எண்ணெய்களில் இருக்கும் ஈரப்பதம், தோலின் வறட்சியைப் போக்கும் இயல்புடையது. அதற்காக எல்லா எண்ணெய்யையும் பயன்படுத்த முடியாது. சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்க சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். 

சூரிய காந்தி எண்ணெய்யில் ஈரப்பதம் அதிகம். கலப்படமற்ற சூரியகாந்தி எண்ணெய்யைத் தோலில் தடவுவதன் மூலம், வறட்சியைப் போக்கலாம்.
 
தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்துக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், தோலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரித்து இயற்கையாகவே வறட்சியை எதிர் கொள்ளும் இயல்பைச் சருமத்துக்குக் கொடுக்கும். தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெய்யை வறண்ட சருமத்தின் மீது தடவிக் கொண்டு தூங்கலாம்.
 
நல்லெண்ணெய்யை வறண்ட சருமத்தின் மீது தடவி, நன்றாக மஸாஜ் செய்துவிட்டு பின்பு குளிக்க வேண்டும். இதனால், உடல் குளிர்ச்சி அடைவதுடன், தோலின் வறட்சித் தன்மையும் நீங்கும்.
 
மற்ற எண்ணெய்களைப் போலவே ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆனால் கொஞ்சம் குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் கொழுப்பும், ஈரப்பதம் அளிக்கும் இயல்பும் பிற எண்ணெய்களைக் காட்டிலும், இதில் கொஞ்சம் அதிகம்.
 
பாதம் எண்ணெய்யை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை முகத்தில் தடவி, மஸாஜ் செய்து விட்டுக் குளித்தால், தோலில் உள்ள வறட்சி தன்மை நீங்கி, பொலிவு பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்