கால் அலம்புவதால் உடல் அசதி போகும், கண்பார்வை மேம்படும். ஆண்மைக்குறைவு ஏற்படாது மற்றும் மனச்சோர்வைப் போக்கி சந்தோஷம் கொடுக்கும் போன்ற நாம் அறியாத பல விஷயங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.