ஊறவைத்த பாதாம் பிசினின் அற்புத மருத்துவ பலன்கள் !!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:05 IST)
பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை.


ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

பாதாம் பிசினை தோலில் வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது வெப்பத்தை குறைக்கிறது மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.

கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பாதாம் பிசின் உதவுகிறது. அதிகப்படியான உடல் வெப்பத்தை அனுபவிக்கும் நபராக இருந்தால் பாதாம் பிசின் அதிலிருந்து விடுபட நன்றாக உதவி செய்கிறது.

பாதம் பிசின் வயிற்றிற்கு மிகவும் நல்லது மற்றும் அமிலத்தன்மை, வயிற்றுப் புண்களைக் குறைப்பதற்கான ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம். பாதாம் பிசினை தேங்காய்ப் பாலுடன் கலந்து அதில் வெல்லத்தை சேர்த்து உட்கொள்ளலாம். தேங்காய் பால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று எரிப்பு இரண்டையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்