தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள். அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.