மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை கொண்டு வந்துவிட்ட இளைஞர்: பெரும் பரபரப்பு..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (15:09 IST)
தன்னுடைய வீட்டில் பாம்பு நடமாடுவதாகவும் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் மாநகராட்சியில் கோரிக்கை விடுத்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனை அடுத்து அந்த பாம்பை பிடித்து அவர் மாநகராட்சி அலுவலகத்தில் விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.  
 
தெலுங்கானா மாநிலத்தில் கலந்து சில நாட்களாக கன மழை பெய்து வருவதை அடுத்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்துடன் வீட்டிற்குள் பாம்பு வருவதாக இளைஞர் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். 
 
ஆனால் புகார் அளித்து பல மணி நேரமாகியும் மாநகராட்சி அலுவலகம் கண்டு கொள்ளவில்லை. இதனை அடுத்து அவர் பாம்பை பிடித்துக் கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் விட்டார்
 
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்