ரீல்ஸ் வீடியோவுக்காக தென்னை மரம் ஏறிய இளைஞர்கள்: மரம் முறிந்து விழுந்ததால் விபரீதம்..!

திங்கள், 24 ஜூலை 2023 (10:28 IST)
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக இளைஞர்கள் சிலர் தென்னை மரத்தில் ஏறிய நிலையில் தென்னை மரம் பாரம் தாங்காமல் முறிந்ததை அடுத்து அந்த இளைஞர்கள் கீழே விழுந்த காயம் அடைந்த  அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது. 
 
கேரளாவில் உள்ள மலப்புறம் என்ற மாவட்டத்தில் உள்ள சில இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ செய்ய ஆசைப்பட்டு தென்னை மரத்தின் மீது வரிசையாக அமர்ந்திருந்தனர் 
 
இதில் கடைசியில் உட்கார்ந்திருப்பவர் தென்னை மரத்தை ஆட்ட வேண்டும் என்றும் அந்த வினாடியில் வீடியோ எடுக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் கடைசியாக அமர்ந்த இளைஞர் மரத்தை ஆட்டியபோது எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதனை அடுத்து இளைஞர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆற்றில் விழுந்ததாகவும் தண்ணீரில் விழுந்ததால் இளைஞர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்