அள்ளி குடிக்கலாம் போல! எப்படி இருந்த ஆறு தெரியுமா? – யமுனையின் தற்போதைய நிலை!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (11:19 IST)
ஊரடங்கு அமலில் இருப்பதால் விலங்குகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளதுடன், இயற்கை பகுதிகளும் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு மக்களும் வீடுகலில் முடங்கியுள்ளதால் அரிதான பல விலங்குகளும் சாலைகளில் சர்வ சாதாரணமாக தென்பட தொடங்கியுள்ளன. அது மட்டுமல்லாமல் இயற்கை வாழ்விடங்களும், நீர்நிலைகளும் கூட தூய்மையாகி வருகின்றன.

சமீபத்தில் கங்கை நீரை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு கங்கை நீர் குடிக்க உகந்ததாக மாறியுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் தலைநகர் டெல்லி வழியாக பாயும் யமுனை நதியும் தூய்மையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொழிற்சாலை கழிவுகளால் நுரை மயமாக காட்சியளித்த யமுனை நதி தற்போது கண்ணாடி போல துய்மையாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நதிகளை புணரமைக்க மத்திய அரசின் சார்பில் நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நதிகள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தூய்மையாகி உள்ளது சமூக ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்