கணவரின் காப்பீட்டுத் தொகைக்காக காத்திருந்த மனைவி… திட்டம் போட்டு கொன்ற குடும்பம்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (10:02 IST)
பீகாரில் கணவன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் அவரின் காப்பிட்டுத் தொகைக்காக அவரின் மனைவியை கொலை செய்துள்ளனர்.

பீகாரை சேர்ந்தவர் மண்ணி குமார். இவருக்கு லலிதா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் மன்னி குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் காப்பீட்டுத் தொகை மனைவியான லலிதா தேவிக்கு வர இருந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இது சம்மந்தமாக போலிஸார் விசாரணையில் ஈடுபட லலிதா தேவியின் அண்ணன் சொன்ன புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னியின் காப்பீட்டுத் தொகைக்காக அவரின் குடும்பமே சேர்ந்து தனது தங்கையை வாயில் விஷம் ஊற்றிக் கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் போலிஸார் லிதாவின் மாமியார், மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்