ஹரியானவில் பெண் ஒருவர் தனியாக நின்று 5 ஆண்களை அடித்து ஓடவிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 5 பேர் சேர்ந்த கும்பல் அந்த பெண்ணின் கணவனை தாக்கி கொண்டு இருந்தனர். இதை பார்த்த அந்த பெண் தன் கையில் கிடைத்த கம்பை வைத்து அனைவரையும் தாக்கினார். அவர்கள் திருப்பி தாக்கும் போது கூட கவலை படாமல் தாக்கி இருக்கிறார். இதனால் அவர்கள் பயந்து ஓடினர். பின் அவர்கள் எல்லோரும் அங்கிருந்து செல்லும் அவரை காத்திருந்துள்ளார்.
இந்த வீடியோவில் வரும் பெண் யார் என்று தெரியவில்லை, ஆனால் வீடியோ பார்த்த அனைவரும் அந்த பெண்ணை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.