பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் கைக்கடிகாரம்

புதன், 21 பிப்ரவரி 2018 (19:09 IST)
சாலை விபத்தில் சிக்கிய பெண், அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று ஜெர்மனியில் நிகழ்ந்துள்ளது.

 
 
ஜெர்மனியில் கேசி ஆண்டர்சன் என்ற பெண் தனது 9 மாத குழந்தையுடன் காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். அப்போது தன் கையில் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்திலிருந்து ஆபத்து காலத்தில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த 911 என்ற எண்ணை அழுத்தினார்.
 
இதனால் கேசி ஆண்டர்சனையும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது. இதனால் தாயும், குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்