மாதம் 6 லட்ச ரூபாய் ஜீவனாம்சமா? பெண்ணின் வழக்கறிஞரை வறுத்தெடுத்த நீதிபதி..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (18:03 IST)
மாதம் 6 லட்சத்துக்கு மேல் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை நீதிபதி வறுத்தெடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடம் இருந்து தன்னுடைய பராமரிப்பு தொகையாக மாதம் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பெண்ணின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் பிசியோதெரபி செலவு, யோகா செலவு, மருத்துவ செலவு, காலணிகள் ஆடைகள் அணிகலன்கள் வாங்குவது, வீட்டில் சத்தான உணவு செய்வது ஆகியவற்றுக்கு மொத்தம் 6 லட்சத்து 16 ஆயிரத்து 300 ரூபாய் பராமரிக்க தொகை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி கோபமடைந்து ’ஒரு தனிப்பட்ட பெண் 6 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? அவருடைய அத்தியாவசிய தேவை என்ன? கணவர் சம்பாதிப்பதை வைத்து மட்டும் பராமரிப்பு தொகையாக வழங்க முடியாது. கணவரின் சம்பளம் 10 கோடியாக இருந்தால் பராமரிப்பு தொகை 5 கோடி வழங்க வேண்டுமா?

ஒரு தனிப்பட்ட பெண் இவ்வளவு செலவு செய்கிறார் என்றால் அவரே சம்பாதிக்கட்டும் என்று கூறினார். மேலும் மனுதாரருக்கு தான் புரியவில்லை என்றால் நீங்களாவது இதை அவருக்கு அறிவுரை கூற வேண்டாமா? சரியான தொகையை ஜீவனாம்சமாக கேட்காவிட்டால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விடுவேன்’ என்று நீதிபதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்