இந்தியாவில் 3 -வது கொரோனா அலை தாக்குமா?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (15:27 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், கடந்த சில கொரொனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சுமார் 3 லடம் பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தினம் 1,00,636 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இதுமேலும் குறையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று  முன் தினம் பிரதமர் மோடி காணொளி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அதில், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், தீபாவளி வரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.

இந்நிலையில் மக்களுக்கு ஒரு நற் செய்தியாக கொரொனா இரண்டாம் அலை குறைந்துவருகிறது.

ஆனால் வரும் செம்படம் மாதம் இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை உருவாகும் எனவும் இத்தொற்றில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர்.

அதேசமயம், இங்கிலாந்து, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 3 வது அலை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்