இந்த நிலையில் அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை இந்தியாவில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அல்லது விமான கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானத்தில் பயணம் செல்ல எந்தவித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தடை தற்போது மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது