உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து நேற்று கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தி அதை எரித்தனர் கன்னடர்கள்.
இவற்றை தடுக்கவேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததை தேசிய ஜன சேன அமைப்பினர் கண்டித்துள்ளனர். தமிழக முதல்வரை வரம்பு மீறி அவமரியாதை செய்வதை வேடிக்கை பார்க்கும் கர்நாடக அரசை வண்மையாக கண்டிப்பதாக தேசிய ஜன சேன அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும், தமிழக முதல்வரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கன்னட அமைப்புகள் பகிரங்கமாக கலவரம் நடத்துவோம் என சொல்லி தமிழர்களை அச்சுறுத்துவதை கர்நாடக முதல்வர் வேடிக்கை பார்ப்பதா?
தமிழக அரசியல்வாதிகள் உடனடியாக ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த அரசியல்வாதி கருணாநிதி வாய்மூடி மௌனம் சாதிப்பது ஏன் ? பாமக எங்கே? மதிமுக எங்கே?
தமிழக முதல்வர் உருவ பொம்மைக்கு தீ வைப்பது பாடை கட்டுவது, ஈமச்சடங்கு செய்வதற்கு போதிய அவகாசம் கொடுக்கும் காவல்துறைக்கும் கன்னட முதல்வருக்கும் கடும் கண்டணம். முதல்வர் படத்தை எரிக்கவோ இழிவுபடுத்தும் செயல் இனி தொடர்ந்தால் பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கிறோம் என்று தேசிய ஜன சேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.