மோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த சேலை என்னாயிற்று?

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (17:14 IST)
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு, நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார்.


 

இதனால், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
அதேபோல, 2015 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போயிருந்த மோடி திடீர் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றார். நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனதாக பத்திரிகைகள் கொண்டாடின.
 
அப்போது, நவாஸ் ஷெரீப் மோடியின் தாயாருக்கு சேலை ஒன்றினை பரிசளித்தார். அந்த சேலைதான் சமாதானக் கொடி என்பது போல இந்திய ஊடகங்கள் எழுதித் தள்ளின. இதனால், காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாத பிரச்சனை, பயங்கரவாத பிரச்சனை அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கருதின.
 
ஆனால், தற்போது உரி தாக்குதலை அடுத்து, மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தான் தீவிரவாத நிலைகள் மீது ’சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தின. இதற்கிடையில் மோடி பாகிஸ்தான் பிரதமரிடம் காட்டிய மரியாதை என்ன ஆனது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்