சாப்பாடு இல்ல.. ஒன்லி டீ, ஹார்லிக்ஸ்தான்! 50 ஆண்டுகளாக உயிர்வாழும் அதிசய பாட்டி!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:26 IST)
மேற்கு வங்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மூதாட்டி ஒருவர் வெறும் திரவ உணவுகளையே மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.

உலகம் முழுவதும் மனிதர்கள் பார்க்க ஒன்றுபோல இருந்தாலும் பலர் பல விதங்களில் மாறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். பலருக்கு பல உணவுகள் அலர்ஜியாக இருப்பதால் வாழ்நாள் முழுக்கவே அப்படியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு பாட்டி அலர்ஜியால் அல்ல தன் வைராக்கியத்தால் உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார்.

மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹூக்ளி பகுதியை சேர்ந்தவர் 76 வயதான அனிமா சக்ரபூர்த்தி பாட்டி. பாட்டி இதுவரை சாதம், சப்பாத்தி, டிபன் ஐட்டங்கள் போன்ற திட உணவுகளையே எடுத்துக் கொண்டதில்லையாம். காலை ஒரு டீ, மதியம் ஒரு ஹார்லிக்ஸ், மாலை ஒரு ஜூஸ் என ஒன்லி திரவங்களை மட்டுமே குடித்து வருகிறார்.

ALSO READ: பட்டியலின மக்கள் கொடியேற்றுவதில் பிரச்சினை! – தலைமைச்செயலர் கடிதம்!

கிட்டத்தட கடந்த 50 ஆண்டுகளாகவே பாட்டி இப்படியாகதான் சாப்பிட்டு வருகிறார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த முடிவு என்பது குறித்து அந்த பாட்டியே சொன்னபோது சிறுவயதில் தனது தாய் சந்தித்த வறுமையின் காரணமாக அப்போது திரவ உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த பாட்டி பின்னர் அதையே தனது வாழ்நாளைக்கான உணவாக மாற்றிக் கொண்டுள்ளார்.

என்னதான் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டாலும் கூட பாட்டி இந்த வயதிலும் ஆரோக்கியமாக அனைத்து வேலைகளையும் செய்வது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்