அமெரிக்காவில் இருந்து வந்த 4 பேருக்கு BF 7 ஒமைக்ரான் தொற்று: மேற்குவங்கத்தில் பரபரப்பு

வியாழன், 5 ஜனவரி 2023 (10:12 IST)
அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த நான்கு பேருக்கு புதிய வகை BF 7 ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நான்கு பேர்களில் 3 பேர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீனாவில் தற்போது BF 7 ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து அந்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து நேற்று மேற்குவங்க மாநிலத்திற்கு வந்த நான்கு பேருக்கு BF 7 ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
புதிய வகை BF 7 தொற்று பரவிய 4 பேர்களில் 3 பேர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும் எனவே உடனடியாக அனைத்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களை நிறுத்தினால் தான் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்