பட்டியலின மக்கள் கொடியேற்றுவதில் பிரச்சினை! – தலைமைச்செயலர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:50 IST)
வரும் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு தலைமைசெயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் கிராம பஞ்சாயத்து தலைவர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பஞ்சாயத்து தலைவர்கள் பட்டியலின மக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தேசிய கொடியை ஏற்ற மறுக்கப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த முறை அப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் பட்டியலின பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு தலைமை செயலர் அனைத்து பகுதிகளிலும் பட்டியலின பஞ்சாயத்து, ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்