அமித்ஷாவுடன் நான் பேசியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (14:03 IST)
சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அங்கீகாரம் பறிக்கப்பட்ட நிலையில் அதை திரும்ப பெறுவதற்காக அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியதாக பரபரப்பான தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் தேசிய கட்சி அந்தஸ்தை திரும்ப பெறுவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நான் பேசியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி போய் செய்தியை பரப்பி வருகிறார். அமித்ஷாவுடன் நான் பேசியதை நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ஒரு சில கட்சிகளை தேசிய கட்சி அந்தஸ்து திரும்ப பெற்ற நிலையில் அவ்வாறு தேசிய கட்சி அங்கீகாரம் பறிக்கப்பட்ட கட்சிகளில் ஒன்று மம்தா பானர்ஜியின்  திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்