130 குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:39 IST)
மேற்கு வங்கத்தில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் திடீர் காய்ச்சல், வயிற்றுபோக்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் கல்பைகுரி மாவட்டத்தில் 130 குழந்தைகளுக்கு திடீரென வயிற்றுபோக்கு, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம் என மருத்துவர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில், தேவைப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்