மேஜை மீது ஏறி அமளி - வெங்கய்யா நாயுடு கண்ணீர்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:18 IST)
மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர் மல்க பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது நடைபெற்று வரும் மழை கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பல நாட்கள் பாராளுமன்றம் நடைபெற விடாமல் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர். 
 
இந்நிலையில் மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர் மல்க பேசினார். எம்பிக்கள் சிலர் மாநிலங்களவையில் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதால் வெங்கய்யா நாயுடு கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்