ராகுல் காந்திக்கு தனது எதிரி யார் என்பதில் குழப்பம் உள்ளது. வயநாடு கம்யூ. வேட்பாளர் ஆனிராஜா ..!

Siva
புதன், 13 மார்ச் 2024 (15:11 IST)
ராகுல் காந்திக்கு தனது எதிரி யார் என்பதில் குழப்பம் உள்ளது என்று வயநாடு தொகுதி இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனிராஜா என்பவர் பேட்டியளித்துள்ளார். 
 
வயநாடு தொகுதியில் முதலில் இடது கம்யூனிஸ்ட் தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜாவின் மனைவி ஆனிராஜா போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் வேட்பாளர் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்தும் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் ஆனிராஜா சமீபத்தில் பேட்டி அளித்த போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் அவர் தனது அரசியல் எதிரி யார் என்ற குழப்பத்தில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்றும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேறு யாரையாவது நிறுத்தி இருந்தால் கூட நாங்கள் விமர்சனம் செய்திருக்க மாட்டோம்  ராகுல் காந்தியை போட்டியிடுவதால் தான் அவர் எதிரி யார் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்   
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்