இன்னும் 3 நாளில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி விநியோகம் - இந்திய அரசு

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (14:01 IST)
மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் இன்னும் 2.58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக கையிருப்பில் இருப்பதாக தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் இன்னும் 2.58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக கையிருப்பில் இருப்பதாகவும், இன்னும் 3 நாள்களில் மேலும் 20 லட்சம் டோஸ் விநியோகம் செய்யப்படும் என்றும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்