சொந்த மகளுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சி! – தந்தை கைது!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
உத்தர பிரதேசத்தில் சொந்த மகளுக்கு தந்தையே விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாவட்டம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சமீபத்தில் குரங்கு கடித்துவிட்டதாக தனது மகளை மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார் நவீன்குமார். இளம்பெண்ணை மருத்துவர்கள் சோதித்ததில் அவருக்கு அதிக அளவில் பொட்டாசியல் குளோரைடு ஊசி மூலமாக செலுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் சிசிடிவி காட்சியை ஆராய்ந்ததில் அம்மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்த நபர் டாக்டர் உடையில் சென்று ஊசி போட்டது தெரிய வந்துள்ளது. வார்டு பாயை பிடித்து விசாரித்ததில் பெண்ணின் தந்தை நவீன்குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து விஷ ஊசி போட சொன்னதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் நவீன்குமாரை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது தனது மகள் வேறு ஒரு ஆணை காதலிப்பதாகவும், அது தனக்கு பிடிக்காததால் பென்ணை கொல்ல இந்த முயற்சியை செய்ததாகவும் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளம்பெண் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்