தடுப்பூசியா? விஷ ஊசியா? வதந்தியால் ஆற்றில் குதித்து ஓடிய பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (09:45 IST)
தடுப்பூசியா? விஷ ஊசியா? வதந்தியால் ஆற்றில் குதித்து ஓடிய பொதுமக்கள்!
தடுப்பு ஊசி போட வந்த சுகாதார அதிகாரிகள் விஷ ஊசி போடுவதற்காக வந்துள்ளார்கள் என்று பரவிய வதந்தி காரணமாக பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஆற்றில் குதித்து தப்பி ஓட முயற்சித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரபாங்கி என்ற கிராமத்தில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி போட வந்தனர். அவர்களை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஆற்றில் குதித்து தப்பித்து ஓடினார்கள்.
 
தடுப்பூசி போட வந்தவர்களை விஷ ஊசி போடுவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர்கள் தெறித்து ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரையும் அழைத்து தாங்கள் தடுப்பூசி போட வந்திருப்பதாகவும் விஷ ஊசி போட வரவில்லை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி போட்டால் வைரஸ் பாதிப்பு குறையும் என்றும் விளக்கமளித்தனர் 
 
இதனை அடுத்து ஒரு சிலர் மட்டும் சமாதானமடைந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் சுகாதாரத்துறை அதிகாரி செல்லும் ஆற்றிலேயே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்