ஜீலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (22:07 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு  அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும்  ஜூலை 31 வரை நீட்டிப்பு  செய்து  மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில்,  பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், கொரோனா கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில்  இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்