நிர்மலா சீதாராமன் 4 மணிக்கு உரை: என்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
புதன், 13 மே 2020 (11:08 IST)
இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது மக்களிடையே உரையாற்ற உள்ளார். 
 
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பிரதமர் மோடி மக்களுடன் 5 முறை உரையாற்றியுள்ளார். அதன்படி தனது நேற்றைய 5வது உரையில் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு பற்றியும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டார். 
 
இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இதில் விளக்கப்படலாம் என தெரிகிறது. 
 
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த ஊரடங்கில் முதல் ஊரடங்கின் போது மட்டுமே சில சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நான்காம் ஊரடங்கின் போது சில அறிவிப்புகள் வழங்கப்பட உள்ளன. 
 
ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு பாதிப்பின் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அளவு 1.5% வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்