பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை..!

Siva
வெள்ளி, 17 ஜனவரி 2025 (18:37 IST)
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து அவர் நிதி அமைச்சராக இருந்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து இந்த ஆண்டு அவர் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கலாம் என்றும், குறிப்பாக வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்