ஊழல் வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை, என்றும் அவரது மனைவிக்கு ஏழு ஆண்டுகள் சிறை என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.