மாட்டு இறைச்சி கொண்டு சென்றவர்களை பசுவின் சாணத்தை சாப்பிட வைத்த கொடுமை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (14:14 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, தாத்ரி என்ற கிராமத்தில் முதியவர் ஒருவர், மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தார்.


 

 
தொடர்ந்து , வட மாநிலங்களில் மாட்டு இறைச்சி தொடர்பான விவகாரம் வலுத்து வருகிறது. இந்நிலையில் மேவாட் என்ற பகுதியில் ரிஸ்வான், முக்தியார் என்ற இரு வாலிபர்கள் கடந்த 10ஆம் தேதி 700 கிலோ மாட்டு இறைச்சியை நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். 
 
அவர்களை தடுத்து நிறுத்திய பசு பாதுகாப்பு தலைவர் தர்மேந்திர ராவ் மற்றும் அவரது ஆட்கள், அவர்கள் இருவரையும் அடித்து உதைத்துள்ளனர்.  மேலும், அவர்கள் இருவரையும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தர்மேந்திர யாதவ் “ அவர்களை புனிதப்படுத்தும் வகையில் பசுவின் சாணத்தை சாப்பிட வைத்தோம். பசுவின் சிறுநீரை குடிக்க வைத்தோம். பசுவின் சாணம், தயிர், பால், சிறுநீர், நெய் அனைத்தும் புனிதத்தன்மை கொண்டது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவே இப்படி செய்தோம்” என்று கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்