ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவில் பல்வேறு நாச வேலைகள் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். அவர்களின் முயற்சியை எல்லையில் இருக்கும் நமது பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான இருவர் நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.