நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்தநாக் தொகுதியில் போட்டியிட இருந்த நிலையில் இந்த தொகுதியில் மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் தற்போது இந்த தேர்தல் மே 25ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயற்கை தடைகள், பிரச்சாரம் செய்வதில் சிரமம் உட்பட சில பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால் வேட்பாளர்களின் கோரிக்கையை கணக்கில் கொண்டு மே 25ஆம் தேதி ஆறாம் கட்டமாக நடைபெறும் தேர்தலோடு அனந்த்நாக் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
ஆனால் இந்த முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவதை பாஜக விரும்பவில்லை என்றும் அதனால் தேர்தல் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தை தவறாக மத்திய அரசு பயன்படுத்துவது என்றும் மெகபூபா முப்தி குற்றம் சாட்டி உள்ளார்.