டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..!

Mahendran
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (18:01 IST)
டெல்லி சட்டப்பேரவையில்  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரினால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் எதிர்கட்சிகள் வலியுறுத்தாமலேயே அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த உள்ளார். இது குறித்து அவர் விளக்கம் கூறியதாவது:

பொய் வழக்குகளை போட்டு மற்ற மாநிலங்களில் கட்சிகளை பிளவுபடுத்துவதையும், அரசுகளைக் கவிழ்வதையும் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.

டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால், அரசைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டவே, நான் ஒரு நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறேன்"

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்