அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

Mahendran

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:12 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுபான ஊழல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் 
 
விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் டெல்லியில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பின்னர் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்