இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் டிரம்ப்: கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்!!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (13:57 IST)
டொனால்ட் டிரம்ப் இந்தியா அடுத்த மாதம் இந்திய வரவுள்ளதாகவும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
 
அமெரிக்கா நட்பு பாராட்டும் நாடாக இந்தியா உள்ளது. இதனின் வெளிப்பாடாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்காக அகமதாபத்தில் ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிகிறது. 
 
டிரம்பின் பயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் மத்தியில் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு அவர் வருவது உறுதியாகியுள்ளது. டிரம்ப் தங்க டெல்லி ஐடிசி மவுரியா சோட்டல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
 
மேலும், காஷ்மீர் விவகாரம், ஈரான் பிரச்சனை, பயங்கரவாத தாக்குதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்தை பொருத்தவரை பாதுகாப்பு மற்றும் வர்த்தக துறைகளில் இருக்ககூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்