திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காது என்பதால் பாஜகவுக்கு தாவியது தவறான முடிவு என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து திபெண்டு பிஸ்வாஸ் எனும் அந்த முன்னாள் எம் எல் ஏ மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அப்போதிருந்த மனச்சோர்வு மிக்க காலத்தில் தவறான முடிவெடுத்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கடிதம் ஒன்றை சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.