கொரோனா முதல் அலைக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் மட்டுமே லாபம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இரண்டாவது அலை முடிந்து திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் மற்றும் மக்கள் கூட்டம் வருமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதை தயாரிப்பு தரப்பு மறுத்தாலும் மறுபக்கத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஓடிடியில் ரிலீஸ் செய்ய படத்தின் பட்ஜெட் அளவுக்கு(சுமார் 50 கோடி) தொகையைக் கேட்கிறார்களாம். ஆனால் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்கே அதை விட கம்மியான தொகையே கொடுக்கப்பட்டது என ஓடிடி நிறுவனம் பேரம் பேசத் தொடங்கியுள்ளதாம். இரு தரப்புக்கும் சம்மதமான விலை படியும் போது கண்டிப்பாக ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.