ஏர்டெல், வோடபோன் ப்ளான்களுக்கு தடை – ட்ராய் அதிரடி

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:48 IST)
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களில் குறிப்பிட்ட சில ரீசார்ஜ் ப்ளான்களுக்கு தடை விதித்து ட்ராய் உத்தரவிட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் அதிவேக இணைய சேவையான 4ஜி புழக்கத்தில் உள்ளது. அதற்கேற்ப 4ஜி சேவைகளுக்கான பல்வேறு டேட்டா ப்ளான்களை பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் புதிய அதிவேக இணைய சேவைக்கான டேட்டா ப்ளான்களை அறிமுகப்படுத்தின.

அதன்படி ஏர்டெல் ப்ளாட்டினம் பேக் ரூ.499 என்ற ப்ளான் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற 4ஜி ப்ளான்களுக்கு கிடைக்கும் இணைய வேகத்தை விட இதில் வேகம் அதிகமாக இருக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டது. இதேபோல வோடபோனும் ரெட் எக்ஸ் என்ற ப்ரீமியம் ப்ளானை அறிமுகப்படுத்தியது. அதுவும் இதே போல மற்ற ப்ளான்களை விட 4ஜி வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ட்ராய் விதிமுறைகளை மீறியுள்ளதாக இந்த இரு ப்ளான்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. 4ஜி என்பது ஒரே வேக அலைவரிசை எனும்போது அதில் அதிக கட்டணம் செலுத்துபவருக்கு அதிவேக இணையம் என்பது ட்ராய் விதிமுறைகளின் தரத்தை மீறியதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்