பெங்களூரில் தக்காளி திருடி சென்னையில் விற்பனை செய்த தம்பதி கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (11:26 IST)
பெங்களூரில் இரண்டு டன் எடையுள்ள தக்காளி ஏற்றி வந்த வாகனத்தை கடத்தி அதை சென்னைக்கு கொண்டு வந்து அந்த தக்காளியை விற்பனை செய்த தம்பதி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை அடுத்து தக்காளியை திருடும் குற்ற சம்பவங்களும் தக்காளி வியாபாரிகளை கொலை செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் பெங்களூரில் தக்காளியுடன் சென்ற வாகனத்தை கடத்தி சென்றதாக விவசாயி ஒருவர் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர் 
 
அப்போது பெங்களூரில் தக்காளி உடன் சென்ற வாகனத்தை திருடியது தமிழக தம்பதிகள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேலும் மூன்று பேருக்கு வலை வீசி உள்ளனர். திருடிய தக்காளியை அவர்கள் சென்னையில் விற்றதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்