இன்று ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

புதன், 19 ஜூலை 2023 (07:27 IST)
தக்காளி விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே சென்றது என்பதும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை ஆனது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தக்காளி விலை இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் குறைந்துள்ளதாகவும் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
நேற்று ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் 125 என மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் தக்காளி வரத்து அதிகரிப்பதால் விலை குறைந்துள்ளதாகவும் தொடர்ந்து விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தக்காளி விலை சில்லறையில் 120 வரை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்