துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியை கொண்டு வந்த இளம்பெண்..ஆச்சரிய தகவல்..!

சனி, 22 ஜூலை 2023 (09:19 IST)
துபாயிலிருந்து இந்தியா வந்த இளம் பெண் பத்து கிலோ தக்காளியை சூட்கேசில் வைத்து கொண்டு வந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
வட இந்தியாவில் தக்காளி 200 ரூபாய் அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் தனது அம்மா வீட்டிற்கு துபாயிலிருந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். 
 
அப்போது அவர்கள் தனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டபோது அவர் 10 கிலோ தக்காளி வாங்கி வா என்று கூறியதாகவும் உடனே அவர் துபாயில் 10 கிலோ தக்காளி வாங்கிய தனது சூட்கேஸிற்குள் வைத்து கொண்டு வந்ததாகவும்  அவரது கணவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்
 
இந்த பதிவு ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர் என்பதும் துபாயிலிருந்து எல்லோரும் நகை தான் கொண்டு வருவார்கள் ஆனால் இந்த பெண் தக்காளி கொண்டு வந்திருக்கிறார் என்றும் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்