திருப்பதியில் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள்!!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:47 IST)
திருப்பதியில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டோக்கன்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
முதலில் 10,000 பேர் மட்டுமே இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 30,000 பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டோக்கன்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்து, சாதாரண பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் வழிபட கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்